போச்சம்பள்ளியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் அமோகம்!

போச்சம்பள்ளி வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் அமோகமாக நடைபெற்றது.  கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில், கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமை கொப்பரை ஏலம் விடப்படுவது வழக்கம்.…

போச்சம்பள்ளி வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை தேங்காய்
கொள்முதல் அமோகமாக நடைபெற்றது. 

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில், கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை கூட்டுறவு
விற்பனை சங்கத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமை கொப்பரை ஏலம் விடப்படுவது
வழக்கம். அந்த வகையில் நேற்று போச்சம்பள்ளி வேளாண்மை கூட்டுறவு விற்பனை
சங்கத்தில் நடைபெற்ற ஏலத்திற்காக சுற்று வட்டார பகுதிகளான போச்சம்பள்ளி,
அரசம்பட்டி, புலியூர், மொரப்பூர், கல்லாவி, ஈச்சம்பாடி டேம், உள்ளிட்ட
பகுதிகளிலிருந்து விவசாயிகள் தங்களது கொப்பரை தேங்காய்களை சுமார் 20 டன்
அளவிற்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

திருப்பத்தூர், வெள்ளைகோவில், வாணியம்பாடி மற்றும் போச்சம்பள்ளி பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்துக்கொண்டு கொப்பரை தேங்காய்களை தரத்திற்கேற்ப ஏலம் எடுத்தனர். ஒரு கிலோ ரூ.52 ரூபாய் முதல் ரூ.77 வரை ஏலம் போனது. வேளாண் துணை பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சுந்தரம், தலைமையில் இந்த ஏலம் நடைபெற்றது.

ஏலத்தொகையை வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் அனைத்து விவசாயிகளுக்கும் பட்டுவாடா செய்யப்பட்டது. இதுநாள் வரை பெருந்துறை மார்க்கெட்டிற்கு கொண்டு சென்ற விவசாயிகள் தற்போது போச்சம்பள்ளி வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஏலத்தில் நல்ல விலை கிடைப்பதாலும், அன்றே பணம் பட்டுவாடா ஆகிவிடுவதாலும், நாளுக்கு நாள் விவசாயிகள் பெருகி வருவதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ரெ. வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.