பாமக நிர்வாகி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சரண்!

செங்கல்பட்டு பாமக நிர்வாகி நாகராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி அன்வர் உசேன் விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியதை தொடர்ந்து 17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க விழுப்புரம் நீதிபதி…

செங்கல்பட்டு பாமக நிர்வாகி நாகராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி அன்வர் உசேன் விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகியதை தொடர்ந்து 17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க விழுப்புரம் நீதிபதி உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட மகான் சந்து பகுதியை சேர்ந்த பாமக நகர
செயலாளர் நாகராஜ் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மணிக்கூண்டு பகுதியில் பூ கடை வியாபாரம் செய்து வந்தார். இவர் கடந்த 10 ஆம் தேதி இரவு பூக்கடையை மூடி விட்டு வீட்டுக்கு திரும்பி உள்ளார்.

அப்பொழுது அடையாளம் தெரியாத ஏழு பேர் கொண்ட கும்பல் பூக்கடை நாகராஜ்யை சரமாரியாக அறிவாளால் வெட்டி படு கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். இச்சமபவத்தில் பாமக பூக்கடை நாகராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு நகர காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்தது. மேலும் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அன்வர் உசேன் என்பவர் விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் இரண்டில்  சரணடைந்தார்.

இந்த வழக்கில் சரணடைந்த குற்றவாளிக்கு நீதிபதி அகிலா 17 ஆகஸ்ட்  தேதி
வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில்
அன்வர் உசேன் வேடம்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஸ்ரீ.மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.