முக்கியச் செய்திகள் இந்தியா

நகர்புறங்களில் 1.1 கோடி வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல்!

பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 1,68,606 புதிய வீடுகள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழுவின் 52வது கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதன் முடிவில் 1.68 கோடி புதிய வீடுகள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவை சிக்கன விலை வீடுகளாகவும், குடிசைப் பகுதி மேம்பாடு வீடுகளாகவும் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே 70 லட்சம் வீடுகளுக்கான கட்டுமானங்கள் பல்வேறு மட்டங்களில் நடந்து வருகின்றன. 41 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது. இதன்மூலம் 1.1 கோடி வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கூட்டத்தில் பேசிய மத்திய வீட்டு வசதி துறை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா, பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதற்கான உத்திகளை மாநிலங்கள் வகுக்க வேண்டும். இத்திட்டத்தின் முன்னேற்றம் சீராக உள்ளது, அனைத்து வித அடிப்படை மற்றும் சமூக கட்டமைப்பு வசதிகளுடன் இந்த வீடுகளை நாம் முடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

வீடுகளை முடித்து பயனாளிகளுக்குக் கொடுப்பதில் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கவனம் செலுத்த வேண்டும் என்றும், மலிவு விலை வாடகை வீடுகள் திட்டத்தை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் விரைந்து அமல்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Advertisement:

Related posts

விவசாயம் செழிக்க பாடுபடுவேன்: மோகன் குமாரமங்கலம்!

Ezhilarasan

திமுக வேட்பாளர் துரைமுருகன் பின்னடைவு!

Karthick

விவசாயிகள் போராட்டத்திற்கு எதிராக உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்

Jayapriya

Leave a Reply