பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்த நாளையொட்டி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மற்றும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தனது 72வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். நாடு முழுவதும் பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளில் அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தேசத்தைக் கட்டியெழுப்பும் பிரசாரத்தில் ஒப்பற்ற கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் படைப்பாற்றலுடன் கூடிய உங்கள் தலைமையில் தொடர்ந்து முன்னேற விரும்புகிறேன். கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் தர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/RahulGandhi/status/1570958936261660672?t=TkW-fr86fxrYCkl3KWQn8w&s=08
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
இந்தியாவின் புகழ்பெற்ற பிரதமரான மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் தனது தலைமையில் நாட்டில் முன்னேற்றம் மற்றும் நல்லாட்சிக்கு வலிமையைக் கொடுத்துள்ளார். மேலும் உலகம் முழுவதும் இந்தியாவின் கௌரவத்திற்கும், சுயமரியாதைக்கும் புதிய உயரங்களை வழங்கியுள்ளார். கடவுள் நலமுடன் நீண்ட காலம் வாழட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா









