தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி, ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆகிய மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக, 8 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளையும், 41 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளையும், 332 வார்டு உறுப்பினர் பதவிகளையும் கைப்பற்றியது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவியேற்று வருகின்றனர்.
https://twitter.com/narendramodi/status/1450655200981618694
இந்த நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவினருக்கு வாழ்த்துக்கள். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம்” என தெரிவித்துள்ளார்.







