முக்கியச் செய்திகள் இந்தியா

பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் குருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு

டெல்லி குருத்வாராவில், குரு தேக் பகதூரின் 400-வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று வழிபட்டார்.

சீக்கிய மத குருக்களில் ஒருவரான குரு தேக் பகதூரின் 400வது பிறந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பத்து சீக்கிய குருக்களில், சீக்கிய மத நம்பிக்கையின் ஒன்பதாம் குரு நானக் இவர். இவருடைய பிறந்த தினத்தை முன்னிட்டு, சீக்கியர்கள் பல்வேறு பகுதிகளில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள சிஸ் கஞ்ச் சாஹிப் குருத்வாராவுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் பிரதமர் மோடி இன்று காலை சென்றார். அவர் செல்லும் பாதைகளில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏதும் செய்யப்படவில்லை. அவருக்கான சிறப்பு பாதுகாப்பும் மேற்கொள்ளப்படவில்லை.

குருத்வாராவுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை, குருத்வாரா நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் அவர் அங்கு வழிபாடு மேற்கொண்டார்.

Advertisement:

Related posts

இன்று வெளியாகிறது தமிழக அமைச்சரவை பட்டியல்!

L.Renuga Devi

கொப்பரை தேங்காய் குறைந்த பட்ச ஆதார விலை உயர்வு!

Jeba

ஆறு தொகுதிகளில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் பெயர் பட்டியல் வெளியீடு!

Karthick