சுழற்சி முறை பணியை அமல்படுத்த வேண்டும்: தலைமைச் செயலக ஊழியர் சங்கம்

தலைமைச் செயலகத்தில் 50 சதவீத பணியாளர்களுடன் , சுழற்சி முறை பணியை அமல்படுத்த வேண்டும் என்று, தலைமைச் செயலக ஊழியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு, இது தொடர்பாக…

தலைமைச் செயலகத்தில் 50 சதவீத பணியாளர்களுடன் , சுழற்சி முறை பணியை அமல்படுத்த வேண்டும் என்று, தலைமைச் செயலக ஊழியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு, இது தொடர்பாக தலைமைச் செயலக ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில், 55 வயதுக்கு மேற்பட்ட பணியாளர்கள் பணிக்கு வருவதில் இருந்து, விலக்கு அளிக்க வேண்டும் என்றும், அதே போல பணியாளர்களின் எண்ணிக்கையை, 50 சதவீதமாக குறைத்து சுழற்சி முறையை அமல்படுத்த வேண்டும், என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், தலைமைச் செயலக ஊழயர்கள் சங்கம், அரசுக்கு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.