பிரதமரின் தமிழ்நாடு வருகை உறுதி

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கட்டி  முடிக்கப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வரும் 12ம்…

பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கட்டி  முடிக்கப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வரும் 12ம் தேதி தமிழ்நாட்டிற்கு வரவுள்ளர். இதனிடையே, ஒமிக்ரான், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்க்கப்பட்டுள்ளன. இதனால், பிரதமரின் தமிழ்நாடு பயணம் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி டி ரவி, வருகிற 12-ஆம் தேதி பிரதமர் மோடியின் தமிழக வருகை உறுதியாகி உள்ளது. ஒமிக்ரான் மற்றும் கொரோனா தொற்றின் கட்டுப்பாடுகளை பின்பற்றி நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும் கூறினார். வெள்ள நிவாரணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சி டி ரவி, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் விதிமுறைப்படி தமிழ்நாட்டிற்கு நிதி அளிக்கப்படும் என தெரிவித்தார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.