ஜவஹர்லால் நேருவின் 133ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவர் நினைவிடத்தில் சோனியா காந்தி மரியாதை செலுத்தினார்.
ஜவஹர்லால் நேருவின் 133ஆவது பிறந்த நாள், குழந்தைகள் தினமாக நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து அரசியல் தலைவர்கள், அவர் உருவப்படம் மற்றும் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவருகின்றனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
Tributes to Pandit Jawaharlal Nehru Ji on his birth anniversary.
— Narendra Modi (@narendramodi) November 14, 2021
டெல்லி சாந்திவான் பகுதியில் உள்ள ஜவஹர்லால் நேருவின் நினைவிடத்தில், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
“What we need is a generation of peace.”
– Pandit Jawaharlal NehruRemembering India’s first Prime Minister who greatly valued truth, unity and peace. pic.twitter.com/h89MpL39Ph
— Rahul Gandhi (@RahulGandhi) November 14, 2021
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உண்மை, ஒற்றுமை, அமைதியை பெரிதும் மதிக்கும் இந்தியாவின் முதல் பிரதமரை நினைவு கூர்வதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பீகார் ஆளுநர் பஹூ சவுகான், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆகியோர் அவர் சிலைக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.







