கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை உந்தி பெருக்க இந்தியாவில் ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டுமென தொழில் பிரதிநிதிகளை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக தொழில் பிரதிநிதிகளை காணொலி வாயிலாக சந்தித்து கலந்துரையாடி பிரதமர் மோடி, “நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்றுமதி 20 சதவிகித பங்கு வகிக்கின்றது. கொரோனாவுக் பிந்தைய காலகட்டத்தில் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள புதிய வாய்ப்புகளை இந்திய ஏற்றுமதியாளர்கள் திறம்பட பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நடப்பு நிதியாண்டில் 40ஆயிரம் கோடி அளவில் ஏற்றுமதியை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.
மேலும், “இந்த ஏற்றுமதிகள் இந்தியாவில் புதிய சந்தைகளை உருவாக்க முயற்சிக்க வேண்டும். அரசு இவர்களுக்கு தொடர்ந்து உதவும். சர்வதேச விநியோக சங்கிலியில் இவர்களின் பங்குகளை விரிவாக்க இந்தியா குறைந்த விலை தடவாளங்கள் மூலமாக தடையற்ற தரமான விநியோக சங்கிலியை கொண்டிருக்க வேண்டும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.” என்றும் கூறியுள்ளார்.








