தமிழ்நாட்டில், தனியார் மருத்துவமனைகள் மூலம் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் 23ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதனிடையே மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள கிங் மருத்துவமனைக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் அவிஸ் எல்த் கேர் இணைந்து ரூபாய் 16 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்சசிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்வதற்காக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் குழந்தைகளுக்கு சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு பெற்றுள்ள மருத்துவர்களுக்கு பணி வழங்குவதா இல்லை, கொரோனா நேரத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு பணி வழங்குவதா என்பது குறித்து அரசு உரிய முறையில் பரிசீலித்து நடவடிக்கை என அவர் கூறினார்.