மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து, நாடு முழுவதும் 551 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இந்த ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க வேண்டும் என்றும், விரைவில் அந்த உற்பத்தி நிலையங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். ஏற்கனவே, பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து 162 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைக்க 201.58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







