இந்தியாவில் 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி; பிரதமர் மோடி பாராட்டு!

கொரோனா தொற்று பரவல் குறையாத நிலையில் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. சில நிறுவனங்கள் கண்டுபிடித்த மருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை இந்தியாவில்…

கொரோனா தொற்று பரவல் குறையாத நிலையில் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. சில நிறுவனங்கள் கண்டுபிடித்த மருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை இந்தியாவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர அனுமதி அளிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்நிலையில் சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்கள் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பூசிகளின் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது பாராட்டுக்குரியது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தடுப்பூசியை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்களுக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் ட்விட்டர் மூலம் தனது வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை மேலும் வலுப்படுத்த இது சிறந்த திருப்புமுனை எனவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply