முக்கியச் செய்திகள் இந்தியா

அந்தமான் நிக்கோபாரில் 21 தீவுகளுக்கு பிரதமர் மோடி பெயர் சூட்டினார்!

அந்தமான்-நிக்கோபாரில் மக்கள் வசிக்காத 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர்களின் பெயரை பிரதமர் மோடி இன்று சூட்டினார்.

சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளை நினைவுக்கூறும் வகையில், ஜனவரி 23ம் தேதி பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் பராக்ரம் திவாஸ் தினத்தையொட்டி, அந்தமான் நிக்கோபாரில் உள்ள உள்ள 21 தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர்களின் பெயரை சூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அந்தமான் சென்றார். அங்கு அவருக்கு அந்தமான் மக்கள் சிறப்பான வரவேற்பளித்தனர். பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று 21 தீவுகள்ளு பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்களை சூட்டினார்.

தொடர்ந்து சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபார்ஷ சந்திரபோஸின் பிறந்த நாளை முன்னிட்டு, அந்தமான் நிக்கோபார் தீவில் அமைக்கப்படவிருக்கும் நோதாஜி நினைவிடத்தின் மாதிரியையும் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அந்தமான் நிக்கோபாரில் பெயரிடப்படாத 21 தீவுகளுக்கு, நாட்டுக்கு தியாகம் செய்த ராணுவ வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இன்று பெயர் சூட்டப்பட்டுள்ள 21 தீவுகளில் பல சிறப்புகள் அடங்கியுள்ளன. வீர சாவர்க்கரும், நாட்டுக்காக போராடிய பல மாவீரர்கள் அந்தமானை சேர்ந்தவர்கள். அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் உள்ள நேதாஜியின் நினைவிடம் இப்போது மக்களின் இதயங்களில் இன்னும் அதிகமான தேசபக்தியைத் தூண்டும் என்று கூறினார்.

அந்தமானின் சுதந்த போராட்டத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த மண்ணாகும். முதன்முதலாக மூவர்ணக் கொடி ஏற்றப்பட்ட பூமி இந்த அந்தமான் ஆகும். சுதந்திர இந்தியாவின் அரசாங்கம் முதல் முறையாக உருவாக்கப்பட்டது. வீர சாவர்க்கர் உள்ளிட்ட பல தியாகிகள் அந்தமான் தீவு சிறையில் தான் அடைக்கப்பட்டிருந்தனர். இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள். இந்த நாளை பராக்கிரம் திவாஸ் என்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அதிமுக-வை ஒன்று சேர விடாமல் தனித்து நிற்பவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள் – மனோஜ் பாண்டியன்

Dinesh A

ஆப்கன் புதிய பிரதமர்: தலிபான்கள் அறிவிப்பு

G SaravanaKumar

மாதவராவ் மகள் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு வழங்க வேண்டும்: திருமாவளவன்

EZHILARASAN D