நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்து தயாரிக்க உள்ள படத்தின் அறிவிப்பு மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வந்து அசத்தி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். கடந்தாண்டு அவரின் நடிப்பில் வெளியான ‘பிரின்ஸ்’ படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெற முடியவில்லை. தற்போது சிவகார்த்திகேயன், இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். அவர் படத்தில் நடிக்கும் அதேநேரத்தில் படங்களை தயாரிக்கவும் செய்து வருகிறார்.
இதையும் படிக்க: ஏர் இந்தியாவில் 275 பேர் பெண் பைலட்கள்…!
‘கனா’ படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த அவர், எஸ்.கே (சிவகார்த்திகேயன்) ப்ரொடெக்சன் என்ற பெயரில் படத்தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, வாழ், டாக்டர், டான் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் தங்களது தயாரிப்பில் வெளியாக உள்ள 6வது படம் பற்றிய அறிவிப்பை (#SKPProductionNo6) இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளனர்.
https://twitter.com/SKProdOffl/status/1633701681102716929?t=6qTpM4CWxqnPgWdOQqNjDg&s=08
இதையடுத்து, ரசிகர்கள் அந்தப் படம் சிவகார்த்திகேயன் – ஏ.ஆர்.முருகதாஸ் இணைய உள்ள படம் என்றும், சிலர் நடிகர் சூரி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ள படம் என்றும் சமூகவலைதளங்களில் கூறி வருகின்றனர்.
-ம.பவித்ரா







