வாட்ஸ்அப்பில் விரைவில் எடிட் பட்டன் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. எடிட் பட்டனை டுவிட்டரும் விரைவில் சேர்க்கவுள்ளது. ஆனால், டுவிட்டருக்கு முன் வாட்ஸ்அப் எடிட் பட்டனை சேர்த்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்டா வெர்ஷன் வாட்ஸ்அப்பில் இதற்கான சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நாம் எழுதியதை மறுபடியும் திருத்தும் (எடிட்) வசதி வாட்ஸ்அப்பில் இல்லை. ஆனால், அதை நீக்க முடியும். ஆனால், தற்போது வரவுள்ள இந்த புதிய வசதி மூலம் நம்மால் நாம் அனுப்பிய தகவலை திருத்த முடியும். copy, forward ஆப்ஷன்களுடன் Edit ஆப்ஷனும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி நீங்கள் ஒரு தகவலை மற்றொருவருக்கு அனுப்பிய பிறகும் திருத்த முடியும்.








