அமெரிக்க அதிபரை சந்தித்த பிரதமர் மோடி; அரசு மரியாதையுடன் உற்சாக வரவேற்பு!

அமெரிக்க அதிபரை சந்தித்த பிரதமர் மோடிக்கு  அரசு மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ள பிரதமர் மோடி, 23-ம் தேதி வரை…

அமெரிக்க அதிபரை சந்தித்த பிரதமர் மோடிக்கு  அரசு மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் நேற்று அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ள பிரதமர் மோடி, 23-ம் தேதி வரை அமெரிக்காவில் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இன்று நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.

குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட யோகா தின கொண்டாட்டத்தில் தலைமை தாங்கி பங்கேற்றார். பின்னர், வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் விமான தளத்திற்கு வந்தடைந்ததும், பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

https://twitter.com/narendramodi/status/1671698352705097730?s=20

அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று வெள்ளை மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு அரசு விருந்தில் பங்கேற்றார். வெள்ளை மாளிக்கைக்கு சென்ற பிரதமர் மோடியை, நுழைவாயிலில் காத்திருந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைத்துச் சென்றார்.
அப்போது, பிரதமர் மோடிக்கு பழமையான புத்தகம், மற்றும் பாரம்பரிய காமிரா ஒன்றை பைடன் வழங்கினார். பின்னர், ஜில் பைடனுக்கு 7.5 காரட் கொண்ட வைரக்கல்லினை பிரதமர் மோடி பரிசாக அளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.