தமிழ் என்ற வார்த்தையை கூட உச்சரிக்க பாஜகவுக்கும் பிரதமர் மோடிக்கும் உரிமையில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார்.
இந்திய குற்றவியல் சட்டங்களில் இந்தியா என்ற வார்த்தையை பாரத் என மாற்றுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், குற்றவியல் சட்டங்களை மறுசீரமைக்கும் மத்திய அரசின் 3 மசோதாக்கள், இந்தியாவின் பன்முகத்தன்மையின் சாராம்சத்தை சிதைக்கும் வகையில் உள்ளதாக விமர்சித்துள்ளார்.
குற்றவியல் சட்டங்களில் உள்ள இந்தியா என்ற வார்த்தையை, பாரத் என மாற்றும் மசோதாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர், புதிய சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பது சர்வாதிகார செயல் என குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தி மூலம் நமது அடையாளத்தை மாற்ற முயற்சிக்கும் பாஜகவின் செயலை வீழ்த்துவோம் என தெரிவித்துள்ள அவர்,
இனி, தமிழ் என்ற வார்த்தையை உச்சரிக்க பாஜக மற்றும், பிரதமர் மோடிக்கு தார்மீக உரிமை இல்லை என கூறியுள்ளார்.