நடிகர் சந்தானம் நடித்த டிடி ரிட்டன்ஸ் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அவரது அடுத்த திரைப்படமான ‘கிக்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
நடிகர் சந்தானம் நடித்த ’டிடி ரிட்டன்ஸ்’ என்ற திரைப்படம் கடந்த ஜூலை 28ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதையும் வசூலிலும் திருப்திகரமாக இருந்தது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் ஒரே மாத இடைவெளியில் சந்தானம் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த படம் தான் சந்தானம் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்றான ‘கிக்’.
சந்தானம் ஜோடியாக ’தாராள பிரபு’ படத்தில் நடித்துள்ள தன்யா ஹோப் நடித்துள்ளார். மேலும் ’கிக்’ படத்தில் தம்பி ராமையா, பிரம்மானந்தம், செந்தில், கோவை சரளா, மன்சூர் அலிகான், மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், ராகினி திவேதி ஆகியோர் நடித்துள்ளனர். அர்ஜுன் ஜன்யா இசையில், சுதாகர் ராஜ் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது.
#Kick Releasing in theatres this September 1st Worldwide 🤞
A @iamprashantraj Film 🎥 @iamnaveenraaj @tanyahopee @Fortune_films @saregamasouth pic.twitter.com/AH29KcgUiO— Santhanam (@iamsanthanam) August 11, 2023
இந்த திரைப்படம் செப்டம்பர் ஒன்றாம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். ஒரே மாத இடைவெளியில் சந்தனம் நடித்த அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளியாவது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







