நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள் ளார். இயக்குநர் கே பாலசந்தரால்,1975ஆம் ஆண்டு வெளியான ’அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் ரஜினிகாந்த், தென்னிந்திய சினிமாவின்…

நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள் ளார்.

இயக்குநர் கே பாலசந்தரால்,1975ஆம் ஆண்டு வெளியான ’அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் ரஜினிகாந்த், தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். கடந்த 40 வருடங்களாக தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக இருக்கும் ரஜினிகாந்த், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், தெலுங்கு ஆங்கிலம் என 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். raஅவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘அண்ணாத்த’ படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்தப் படத்தில் நடிக்க அவர் கதை கேட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனால், சமூக வலைதளங்களில் #HBDSuperstarRajinikanth என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். அவருக்கு நடிகர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

https://twitter.com/narendramodi/status/1469901608041410561

இந்நிலையில் பிரதமர் மோடியும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி ட்விட்டரில், ‘நடிகர் ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்; தனது அற்புதமான நடிப்பால் மக்களை தொடர்ந்து மகிழ்விக்கட்டும். எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தரட்டும்’ என்று கூறியுள்ளார்.

https://twitter.com/EPSTamilNadu/status/1469903404767977472

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமான வாழ்வு வாழ எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

https://twitter.com/OfficeOfOPS/status/1469905786180562944

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், அன்புச்சகோதரர் ரஜினிகாந்த்துக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். ரஜினிகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து உயர்ந்திட இறைவனை இறைஞ்சுகிறேன் என்று கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.