சிபிஎஸ்இ 12ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால், நாடு முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. 2020-21ம் கல்வி ஆண்டுக்கான சிபிஎஸ்இ 12ம் வகுப்புத் தேர்வு மே மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா கொரோனா பரவலின் தீவிரம் காரணமாக சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வழங்க 30:30:40 என மதிப்பீடு முறையை சிபிஎஸ்இ அமல்படுத்தியது.
அதன்படி சிபிஎஸ்இ மாணவர்கள் இதற்கு முன்பு 10ம் வகுப்பு தேர்வு, 11ம் வகுப்புத் தேர்வுகளில் வாங்கிய மதிப்பெண்களில் இருந்து தலா 30 சதவீதமும், 12ம் வகுப்பில் பருவ தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களில் 40 சதவீதமும் மதிப்பீடுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்படி 12ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று மதியம் 2 மணிக்கு சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளின் படி 99.37 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மாணவர்களை விட மாணவிகள் 0.54% பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெறாத மாணவர்கள், மதிப்பீட்டு முறையில் அதிருப்தி உள்ள மாணவர்கள் மட்டும் சிபிஎஸ்12ம் வகுப்புத் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் சிபிஎஸ்இ 12ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், “இன்னும் நன்றாக உழைத்திருக்கலாம் அல்லது நன்றாக செய்திருக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். உங்கள் அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குள் ஆழ்ந்த மகிழ்ச்சி கொள்ளுங்கள். பிரகாசமான வாய்ப்புகள் நிறைந்த எதிர்காலம் உங்களுக்காக காத்திருக்கிறது.
நீங்கள் ஒவ்வொருவருமே அறிவின் ஆற்றல் அடங்கியவர்கள்தான். எப்போதுமே என்னுடைய வாழ்த்துகள் உங்களுக்கு உரித்தாகட்டும். இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12ம் வகுப்பில் படித்தவர்கள் எதிர்பாரத சூழலை எதிர்கொண்டனர். இந்த ஆண்டு கடந்த பின்னரும் கல்வி உலகம் பல்வேறு மாற்றங்களின் சாட்சியாக இருக்கிறது. இன்னும் கூட அவர்கள் புதிய வழக்கத்துக்கு பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். சிறந்ததை கொடுக்கவேண்டும். அவர்களை நினைத்துப் பெருமைப்படுகின்றேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.








