“சிறுவர், சிறுமியருடன் கால்பந்து விளையாடியது புத்துணர்ச்சியை அளித்தது” – பிரதமர் மோடி!

சிறுவர் சிறுமியருடன் கால்பந்து விளையாடியது “புத்துணர்ச்சியை அளித்தது” என்று பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சிக்கிம் மாநிலத்திற்கு சென்றுள்ளார். அங்குள்ள சிறுவர்களுடன் கால்பந்து விளையாடும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்ந்து அவர் தனது எக்ஸ் தலத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இனிமையான காங்டாக் காலையில், சிக்கிமில் உள்ள எனது இளம் நண்பர்களுடன் கால்பந்து விளையாடியதை போல் வேறு எதுவும் இல்லை. இந்த இளைஞர்களுடன் இது ஒரு புத்துணர்ச்சியூட்டும் கால்பந்துப் பயிற்சி என்பது தெளிவாகத் தெரிகிறது” என அதில் பதிவிட்டுள்ளார்.

பின்னணியில் லோக் பவன் கட்டிடம் தெரியும் வகையில், மோடி விளையாட்டு வீரர்களுடன் ஒரு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

சிக்கிம் மாநிலம் உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் விதமாக அங்கு நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். அதில், ரூ. 4,000 கோடிக்கும் மேலான மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.

அதுமட்டுமின்றி, ஆர்கிட் மலர்கள் வளர்க்கப்படும் உலகத்தரம் வாய்ந்த ஆர்கிட் பூங்காவான கேங்டாக் பகுதியில் உள்ள ஸ்வர்ணஜெயந்தி மைத்ரி மஞ்சரி பூங்காவைப் பார்வையிடவுள்ளார். இதனால், சிக்கிம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.