முக்கியச் செய்திகள் Local body Election

மறைமுக தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்

மறைமுக தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகள் குறித்த விவரங்களை, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 21 மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலில் 20 மாநகராட்சிகளில் திமுகவும் ஒரு இடத்தில் காங்கிரசும் வெற்றி பெற்றுள்ளது. மாநகராட்சி துணை மேயர் தேர்தலில் திமுக 15 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் மதிமுக, சிபிஐ, சிபிஐஎம், விசிக ஆகிய கட்சிகள் தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

138 நகராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான தேர்தலை பொறுத்தவரையில், திமுக 125 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் சுயேட்சை 4 இடங்களிலும், காங்கிரஸ், மதிமுக, விசிக ஆகியவை தலா 1 இடத்திலும் வெற்றிபெற்றுள்ளன. 4 இடங்களில் குறைவெண் வரம்பின்மை காரணமாக தேர்தல் நடைபெறவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, 138 நகராட்சித் துணைத்தலைவருக்கான தேர்தலில் திமுக 98 இடங்களிலும் காங்கிரஸ் 9 இடங்களிலும் அதிமுக 7 இடங்களிலும் மதிமுக 4 இடங்களிலும், விசிக, சிபிஐ,சிபிஐஎம் ஆகியவை தலா 2 மற்றும் சுயேட்சை 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.மீதமுள்ள 11 இடங்களில் குறைவெண் வரம்பின்மை காரணமாக தேர்தல் நடைபெறவில்லை.

489 பேரூராட்சி தலைவருக்கான தேர்தலில் திமுக 395 இடங்களிலும், காங்கிரஸ் 20 இடங்களிலும், அதிமுக 18 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும், சிபிஐஎம் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

சிபிஐ, விசிக, மமக ஆகியவை தலா 1 இடத்திலும், மதிமுக, அமமுக ஆகியவை தலா 2 இடத்திலும், சுயேட்சை 25 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மீதமுள்ள 13 இடங்களில் குறைவெண் வரம்பின்மை காரணமாக தேர்தல் நடைபெறவில்லை என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், 489 பேரூராட்சி துணைத்தலைவர் பதவியிடங்களுக்கான தேர்தலில் திமுக 331 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் அதிமுக 27 இடங்களிலும் பாஜக 11 இடங்களிலும், சிபிஐஎம் 5 இடங்களிலும், சுயேட்சை 34 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

பாமக, விசிக, ஆகியவை தலா 3 இடங்களிலும், சிபிஐ, மதிமுக, அமமுக ஆகியவை தலா 2 இடங்களிலும், தேமுதிக மமக ஆகியவை தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. மீதமுள்ள 35 இடங்களில் குறைவெண் வரம்பின்மை காரணமாக தேர்தல் நடைபெறவில்லை.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ரூபி மனோகரன் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை நிறுத்திவைப்பு

Web Editor

10 கதாநாயகிகள் பங்கேற்கும் ‘தி லெஜண்ட்’ பட டிரைலர் வெளியீட்டு விழா!

EZHILARASAN D

தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கக்கூடாது : மத்திய அரசு!

Halley Karthik