முக்கியச் செய்திகள் இந்தியா

செவ்வாய், வெள்ளி அருகருகே! எப்போது காணலாம்!!

ஜூலை 12 மற்றும் 13 (நாளை, நாளை மறுநாள்) ஆகிய தேதிகளில் செவ்வாய், வெள்ளி, சந்திரன் ஆகிய கோள்கள் அருகருகே வரும் அற்புத வான் நிகழ்வு நடைபெற உள்ளது.

வான்வெளியில் அவ்வப்போது சில அற்புதங்கள் நிகழ்வதுண்டு. அந்த வகையில் ஜூலை 12 மற்றும் 13 (நாளை, நாளை மறுநாள்) ஆகிய இரு நாட்களில் செவ்வாய், வெள்ளி இரு கோள்களும், சந்திரன் என ஒரு துணை கோளும் அருகருகே வருகின்ற நிகழ்வு நடைபெறுகிறது. இந்த நிகழ்வை வெறும் கண்களால் காணலாம் என தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் சௌந்தரராஜ பெருமாள் தெரிவித்துள்ளார். மேற்கு வானில் சூரியன் மறைந்த 45 நிமிடங்களுக்கு பின்னர் இந்த நிகழ்வை வெறும் கண்ணால் காண முடியும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இரு கோள்களும் பூமியிலிருந்து பார்க்கும் போது 0.5 டிகிரி இடைவெளியில் நெருக்கமாக இருப்பதை காணமுடியும். மேலும், இக்கோள்கள் விலகிச் செல்வதையும் நாளை முதல் காணமுடியும் என தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது. இது போன்ற வான் அதிசயம் கடந்த 2019ல் நடைபெற்றது. ஆனால், சூரியன் இந்த இரு கோள்களுக்கு அருகில் இருந்ததால் இதனை சரியாக கண முடியவில்லை. இதன் தொடர்ச்சியாக இன்றும், நாளையும் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக 2024 பிப்ரவரியிலும், 2034 மே மாதத்திலும் நடைபெறும்.

இந்த வான் நிகழ்வு காரணமாக மனிதர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது என்றும், கற்பனை கதைகளை தவிர்த்துவிட்டு வான் நிகழ்வை வெறும் கண்களில் கண்டுகளிக்கலாம் என்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் சௌந்தரராஜ பெருமாள் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வினை புகைப்படம் எடுத்து outreach@iiap.res.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தால் சிறந்த படங்கள் இணையத்தில் பதிவேற்றப்படும் என இந்திய வான் இயற்பியல் கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

விஜய் சேதுபதி நடிக்கும் முதல் இந்தி திரைப்படம்: ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

Halley Karthik

அமிர்தகடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்; தொடங்குகிறது முதல் யாகசாலை பூஜைகள்

G SaravanaKumar

“ஓபிஎஸ் தவறுமேல் தவறு செய்து வருகிறார்” – ஜெயக்குமார்

Halley Karthik