பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெறுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மக்களிடமிருந்து இன்று காலை நேரடியாக மனுக்களைப் பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முன்னதாக நடைபெற்ற…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மக்களிடமிருந்து இன்று காலை நேரடியாக மனுக்களைப் பெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி
பெற்று ஆட்சி அமைத்தது. முன்னதாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் மக்களின் கோரிக்கை மனுக்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.

அதன்படி, ஆட்சிக்கு வந்தவுடன் உங்கள் தொகுதியின் திட்டத்தின் கீழ் பெறப்ப்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மக்களிடம் நேரடியாக மனுக்களைப் பெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி இன்று காலை 10 மணியளவில், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாகவே பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிய இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.