முக்கியச் செய்திகள் தமிழகம்

மேகதாது அணை பிரச்னை; முதலமைச்சர் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்

மேகதாது அணை கட்டும் பிரச்னை தொடர்பாக விவாதிக்க, சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

மேகதாது அணை பிரச்னை தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமரை நேரில் சந்தித்து, தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை விளக்கினார். மேலும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் ஒன்றிய அரசிடம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த அணை கட்டுவதால் தமிழ்நாடு விவசாயிகள் நலன் பாதிக்கப்படும் என்றும் மேலும் இது உச்சநீதிமன்றம் தீப்புக்கு எதிராக அமையும் என சமீபத்தில் கர்நாடக முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். இதையடுத்து மேகதாது அணை திட்டத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சியினரும் இந்த விவகாரத்தில் ஒருமித்த எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில், மேகதாது அணை பிரச்னை குறித்து கலந்து ஆலோசிக்க, முதலமைச்சர் தலைமையில், இன்று நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறவுள்ளது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., பா.ஜ.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, உள்ளிட்ட 13 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். கூட்டத்தில், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் ஆலோசித்து எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆவின் பொருட்கள் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் – வி.கே.சசிகலா

Web Editor

சாதனை படைத்த வேலூர் அரசு மருத்துவமனை

G SaravanaKumar

6-ம் வகுப்பு மாணவி உலக சாதனை!

Vandhana