146 பயணிகளுடன் #Chennai விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் – டயர் வெடித்ததால் பரபரப்பு!

146 பயணிகளுடன் மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தின் டயர்கள், விமான நிலையத்தில் தரையிறங்கிய போது வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மஸ்கட்டில் இருந்து கிளம்பி சென்னை நோக்கி வந்த விமானத்தின் டயர்கள், விமான நிலையத்தில் தரையிறங்கிய போது…

Plane lands at #Chennai airport with 146 passengers - burst tire causes chaos!

146 பயணிகளுடன் மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தின் டயர்கள், விமான நிலையத்தில் தரையிறங்கிய போது வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மஸ்கட்டில் இருந்து கிளம்பி சென்னை நோக்கி வந்த விமானத்தின் டயர்கள், விமான நிலையத்தில் தரையிறங்கிய போது வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 146 பயணிகளுடன் மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தை தரையிறக்கிய போது, அதன் டயர் திடீரென வெடித்தது.

டயர் வெடித்த நிலையிலும், விமான சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை கட்டுப்படுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டயர் வெடித்ததை தொடர்ந்து, குறிப்பிட்ட விமானத்தின் பயணம் ரத்து செய்யப்பட்டு, அனைத்து பயணிகளும் நகரின் பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.