முக்கியச் செய்திகள் தமிழகம் சினிமா

பொன்னியின் செல்வன் படத்தில் வரும் இடங்கள் சுற்றுலா தலமாக மாற்றப்படும் -அமைச்சர் மதிவேந்தன்

பொன்னியின் செல்வன் படத்தைக் கொண்டு அதில் வரும் இடங்கள் சுற்றுலா தலமாக உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகை வருகின்ற 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் சுற்றுலாத்துறை சார்பில் சென்னையில் உள்ள தீவு திடல் மையத்தில் பட்டாசுக் கடைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பட்டாசு விற்பனை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 144 உரிமையாளர்கள் இணைந்து 47 பட்டாசு கடைகளை அமைத்துள்ளனர். இந்த பட்டாசுக் கடைகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கூட்டாகத் திறந்து வைத்து பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் மதிவேந்தன், ‘தீபாவளி பண்டிகை முன்னிட்டு தீவு திடலில் பட்டாசு விற்பனை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது 45 க்கும் மேற்பட்ட கடைகளில் தரம் வாய்ந்த பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பொதுமக்களைப் பாதிக்காத வண்ணமும் சுற்றுச்சூழல் பாதிக்க வண்ணமும் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது இதை வியாபாரிகளும் பொதுமக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். சீனா பட்டாசு விற்பனையால் பெரிய பாதிப்பு ஏற்படும் ஆனால் தற்போது தரமான பட்டாசு தான் விற்பனைக்கு வந்துள்ளது. குறிப்பாகப் பசுமை பட்டாசு 100 சதவீதம் வந்துள்ளதாக’ தெரிவித்தார் .மேலும் செஸ் ஒலிம்பியாட்டிற்கு பிறகு சென்னை மாமல்லபுரம் சுற்றுலாத்தலத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்கள் வருவதாகவும் இதனால் தாஜ்மஹாலை விட தற்போது மாமல்லபுரம் முதல் இடத்தில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் சுற்றுலாப் பயணிகளைத் தமிழகம் ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுற்றுலா தினத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.குறிப்பாகப் பொன்னியின் செல்வன் படத்தைக் கொண்டு அதில் வரும் இடங்கள் சுற்றுலா தலமாக உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்ல கூடிய சொகுசு கப்பல் தற்போது நான்கு மாதத்திற்கு ஆரம்பித்து இருக்கிறோம் என்றும் இதுகுறித்து பல்வேறு நிறுவனங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் இனி வரக் கூடிய காலங்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சாலையோரம் முகாமிட்ட யானைகள்

“கூட்டணியில் கூட திருமாவளவன் வேண்டாம் என சொல்ல 99% பேர் இருப்பார்கள்” – திருமாவளவன் உருக்கம்

NAMBIRAJAN

சிறுத்தை நகங்கள், யானை தந்தங்கள்.. சிபிஐ விசாரிக்க கோரி வழக்கு

Gayathri Venkatesan