“உங்கள் அரசியல் முதிர்ச்சியை பார்த்து பரிதாபம் வருகிறது” – தனது புகைப்படத்தை காலால் மிதித்த வீடியோவிற்கு #DeputyCM உதயநிதி ரியாக்சன்!

ஆந்திர கோயிலில் துணை முதலமைச்சர் உதயநிதியின் புகைப்படத்தை காலால் மிதிக்கும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அதற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி…

“Pity to see your political maturity” - #DeputyCM Udayanidhi reacts to the video of her photo being trampled!

ஆந்திர கோயிலில் துணை முதலமைச்சர் உதயநிதியின் புகைப்படத்தை காலால் மிதிக்கும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அதற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில்,

“என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது! கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழாகவே இதனைப் பார்க்கிறேன்.

தந்தை பெரியார் மீது செருப்புகளை வீசினர். அண்ணல் அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். பேரறிஞர் அண்ணாவை வசைபாடி மகிழ்ந்தனர். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மீது ஏச்சுக்களையும் – பேச்சுக்களையும் தொடுத்தனர். திமுக தலைவர் மீது வீசப்படாத கடுஞ்சொற்கள் இல்லை. அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. பிறப்பாலும் – மதத்தாலும் பிரித்தாளும் கொள்கையைப் பேசி மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்தி தான் நம்முடைய வெற்றி.

என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும். கட்சி உடன்பிறப்புகள் இதைக்கண்டு கோபமுற வேண்டாம். இதற்கு எதிர்வினையாற்றுவதை – உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்த்து, பெரியார் – அம்பேத்கர் – அண்ணா – கருணாநிதி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியில் பகுத்தறிவு – சமத்துவப் பாதையில் என்றும் அயராது நடை போடுவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.