பிட்டி தியாகராயர் பிறந்தநாள்; சென்னையின் தொடக்கக்கால வளர்ச்சிக்கு பங்காற்றியவர் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்…!

நீதிகட்சியின் முன்னோடித் தலைவர் பிட்டி தியாகராயரின் பிறந்த நாளையொட்டி தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நீதிகட்சியின் நிறுவனர்களில் ஒருவரான பிட்டி தியாகராயரின் பிறந்த நாள் இன்று. இதனையொட்டி தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது ;

ஏப்ரல் 27,  நம் வேரான நீதிக்கட்சிக்கு நீர் வார்த்து வளர்த்த தந்தையாம் வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் அவர்களின் பிறந்தநாள். மாநகராட்சி மன்றத் தலைமைப் பொறுப்பில் இருந்து சென்னையின் தொடக்கக்கால வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர். எவர் மீதும் வெறுப்புணர்வைக் காட்டாத பண்பிற் சிறந்தவர். பார்ப்பனரல்லாதாரின் உரிமைகள், கல்வி வளர்ச்சி ஆகியவற்றுக்காகத் தியாகராயர் ஆற்றிய பணிகள்தான் இன்றும் நம்மை இயக்கும் #DravidianModel. அதன் பயணம் மேலும் உறுதியோடு தொடரும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.