முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழகத்தில் முதல்முறையாக குழாய் வழி எரிவாயு இணைப்புத் திட்டம் நாகையில் தொடக்கம்!

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக நாகை மாவட்டத்தில் குழாய் வழி எரிவாயு இணைப்புத் திட்டத்தை நாகை மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்.

ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற உலக நாடுகள் மட்டுமில்லாமல், மும்பை,
டில்லி உள்ளிட்ட இந்தியாவின் பெருநகரங்களில் செயல்பாட்டில் உள்ள வீட்டிற்கு
வீடு குழாய் வழி எரிவாயு இணைப்புத் திட்டம் நாகை மாவட்டத்தில் முதன்முறையாக
இன்று தொடங்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகலை அடுத்த சீயாத்தமங்கை கிராமத்தில், தமிழகத்திலேயே முதல் முதலாக 14 வீடுகளில் குழாய் வழி எரிவாயு இணைப்பு திட்டத்தை நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் தொடங்கிவைத்தார். டோரண்ட் கேஸ் நிறுவனம் சார்பாக துவங்கப்பட்டுள்ள குழாய் வழி எரிவாயு இணைப்பு திட்டத்தில் இதுவரை 65 இல்லத்தரசிகள் பதிவு செய்துள்ளனர். நாகை மாவட்டம் முழுவதும் வீட்டிற்கு வீடு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும்
பணிகள் விரைந்து தொடங்கப்படும் என்று நாகை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சியாத்தமங்கை கிராமத்தில் மிகுந்த பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ள எரிவாயு
சேமிப்பு நிலையத்தில் இருந்து, 17 கிலோ தூரம் பூமி வழியாக 1 முதல் ஒன்றரை அடி
ஆழத்தில் குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு வழங்கப்படுகிறது. வீட்டிற்கு வீடு
மின்சாரம் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைப்பதுபோல எரிவாயு குழாய்கள்
அமைக்கப்பட்டு, சமையலறைக்கு நேரடியாக எரிவாயு கொடுக்கப்பட்டுள்ளது. எரிவாயு
பயன்பாட்டின் கொள்ளளவை அளவிடும் மீட்டர் கருவி அமைக்கப்பட்டு இருப்பதால்,
நுகர்வோரின் பயன்பாடு எளிமையாக கணக்கிடப்படுகிறது. வீட்டிற்கு வீடு எரிவாயு
இணைப்புகள் கொடுக்கப்பட்டு இருப்பது, மகிழ்ச்சி அளிப்பதாகவும், சிலிண்டர்
பயன்பாட்டைவிட, வீட்டிற்கு வீடு எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு இருப்பது
எளிமையாக இருப்பதாகக் கூறுகின்றனர் இல்லத்தரசிகள்.

LPG சிலிண்டரைவிட பாதுகாப்பானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ள டோரண்ட்
நிறுவனத்தினர், கேஸ் தீரும் அச்சம், புக் செய்யவேண்டியதில்லை, 24 மணி நேரமும்
தடையில்லா கேஸ் விநியோகம் என பல அம்சங்களை கொண்ட திட்டத்தில், செலவீனமும் சிக்கனமாகும் என்று கூறியுள்ளனர். ஏற்கனவே பயன்படுத்தி வந்த 17.9 கொள்ளளவு கொண்ட LPG சிலிண்டர் ஒன்றிய அரசின் கடும் சிலிண்டர் விலை ஏற்றத்தால் 1,062 ரூபாய்க்கு விற்பனையாகி வரும் நிலையில், குழாய் மூலம் வழங்கப்படும் எரிவாயுவில், 1 கொள்ளளவு 45 ரூபாய் வீதம் 805 ரூபாய் மட்டுமே செலவாகும் என்றும் கூறுகின்றனர். மின்சார கட்டணம்போல இரண்டு மாதத்திற்கு ஒருமுறை இணைய வழியிலேயே எரிவாயு கட்டணம் செலுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் நுகர்வோர் அலைய வேண்டிய அவசியமில்லை என்றார் டோரண்ட் நிறுவனத்தின் நிர்வாகி.

கெயில் நிறுவனத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சமையல் எரிவாயுவானது
குழாய்கள் மூலம் பாதுகாப்பான முறையில் வீட்டிற்கு வீடு கொண்டு வருவதை
கண்காணிக்க 24 மணி நேரமும் தொழிநுட்பக் கண்காணிப்பு குழுவினர்
அமைக்கப்பட்டுள்ளனர். நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் 1 லட்சத்து 60
ஆயிரம் இணைப்புகள் கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் தீவிரமாக
நடைபெற்று வருகிறது. தமிழகத்திலேயே பெருநகரங்களுக்கு நிகராக வீட்டிற்கு வீடு
குழாய் வழி எரிவாயு இணைப்புத் திட்டம் நாகை மாவட்டத்தில் தொடங்கப்பட்டு இருப்பது அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

புற்றுநோய் தினம்: அடையாறு புற்றுநோய் மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி!

Jayapriya

மகாராஷ்டிராவில் நிலச்சரிவால் உயிரிழந்த 52 பேரின் உடல்கள் மீட்பு: தேசிய பேரிடர் மேலாண்மை படை

Vandhana

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் கைது

Ezhilarasan