இனி மாற்றுத்திறனாளிகளுக்கு ரொக்கமாக திருமண நிதியுதவி!

மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவித் தொகை இனி முழுவதும் ரொக்கமாகவே வழங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ.50,000 வரை நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. பாதி தொகை ரொக்கமாகவும், பாதி…

மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவித் தொகை இனி முழுவதும் ரொக்கமாகவே வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ.50,000 வரை நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. பாதி தொகை ரொக்கமாகவும், பாதி தொகை தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்பட்டு வரும் நிலையில், முழு தொகையும் இனி ரொக்கமாகவே வழங்கப்படும் என்று கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

முதலமைச்சரின் அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் டிகிரி, டிப்ளமோ படித்த மாற்றுத்திறனாளிகளுக்கு இனி ரூ.50,000 ரொக்கமாகவே வழங்கப்படும் என்றும், இதர மாற்றுத்திறனாளிகளுக்கு இனி ரூ.25,000 ரொக்கமாகவே வழங்கப்படும் என்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.