முக்கியச் செய்திகள் தமிழகம்

புதுக்கோட்டையில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் புகைப்பட கண்காட்சி-அமைச்சர் ரகுபதி தொடங்கி வைப்பு

காந்தி தேசம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அகிம்சையும் ஒற்றுமையும் மதச்சார்பின்மையும் ஒருங்கிணைத்த ஒன்றியம் தான் நம் இந்திய ஒன்றியம் என்று தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலக கூட்டரங்கில் ஒன்றிய அரசின்
மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள்
குறித்த புகைப்பட கண்காட்சி இன்று தொடங்கியது. இந்த கண்காட்சியை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி மத்திய மக்கள் தொடர்பு மற்றும் பத்திரிக்கை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அமைச்சர் ரகுபதி பேசியதாவது:
ஒன்றிய, மாநில அரசுகளின் மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் அறியப்படாத சுதந்திர
போராட்ட தியாகிகளின் புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஒன்று நிகழ்காலத்தில் நடப்பவை மற்றொன்று கடந்த காலத்தை நினைவுபடுத்துபவை, கடந்த
காலத்தைப் பொறுத்தவரை இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டம் யாராலும் மறந்து
விட முடியாது.

ஏனென்றால் கத்தியின்றி ரத்தம் சிந்தாமல் கிடைத்த விடுதலை, அந்த வகையில் உலகம் போற்றுகின்ற அண்ணலாக மகாத்மா காந்தி இருக்கிறார். காந்தி தேசம் என்று சொல்லக் கூடிய அளவிற்கு அகிம்சையும் ஒற்றுமையும் மதச்சார்பின்மையும் ஒருங்கிணைத்த ஒன்றியம் தான் நம் இந்திய ஒன்றியம்.

அறியப்படாத சுதந்திரப் போராட்ட தியாகிகளை நாம் இந்த கண்காட்சியில் பார்க்கும் பொழுது நமக்காக எவ்வளவு தியாகங்களை அவர்கள் செய்துள்ளார்கள் என்பதை நமக்கு தெளிவுப்படுத்துகிறது.

அப்போதே சுதந்திரப் போராட்டத்தில் மகளிர் சகோதரிகள் கலந்து கொண்டிருக்கிறார்கள். மகளிர் பங்கு அப்போதே நம் இந்திய ஒன்றியத்தில் எவ்வாறு
சிறந்து விளங்கியது என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் இந்த கண்காட்சி
அமைந்துள்ளது.

ஒருபுறம் அகிம்சை இருந்தாலும் நம் இந்திய ராணுவத்திற்கு தலைமை ஏற்ற நேதாஜியையும் நாம் மறந்துவிடவில்லை. அதையும் இந்தக் கண்காட்சி எடுத்துக்
கூறுகிறது. யாரெல்லாம் துப்பாக்கியோடு வந்தார்களோ அவர்களை துப்பாக்கியோடு
எதிர்கொண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்ததையும் இந்த கண்காட்சி விளக்குகிறது.

அன்றைக்கே இந்திய ஒன்றியத்தில் ஒரு ராணுவத்தையே உருவாக்கக் கூடிய தலைமை
உடையவராக நேதாஜி இருந்திருக்கிறார் என்பதை யாராலும் மறந்துவிட முடியாது.

வலிமை உடையவர்கள் நாம் அகிம்சையிலும் நம்பிக்கை உடையவர்கள் நாம். இதுதான் உலகத்திலேயே நம் இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது என்று சொன்னால் வலிமையும் ஒற்றுமையும் நம்மிடம் உள்ளது. சகிப்புத்தன்மையும் அகிம்சையும் உள்ளது.

யாருடனும் சண்டைக்குப் போகக் கூடாது என்ற எண்ணமும் உள்ளது. ஒருவேளை சண்டை வந்தால் அதை எப்படி சமாளித்து காட்டுவோம் என்ற ஆற்றலும் நம்மிடம் உள்ளது என்பதை இந்த புகைப்பட கண்காட்சி மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும். அன்றைக்கு நமக்காக போராடியவர்களின் தியாகத்தை மாணவர்கள் எண்ணிப் பார்க்க கடமைபட்டுள்ளீர்கள்.

ஏனென்றால் சாதாரணமாக நமது விடுதலை கிடைத்துவிடவில்லை. அது எப்படி அரும்பாடு பட்டு பல்வேறு வீரர்களின் தியாகத்தாலே கிடைத்தது என்பதை அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சியின் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என்று தெரிவித்தார் அமைச்சர் ரகுபதி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனா தடுப்பூசி : ஜோ பைடன் அதிரடி

Halley Karthik

யுவன் சங்கர் ராஜாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம்

EZHILARASAN D

‘உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைப்பு’ – தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர்

Arivazhagan Chinnasamy