முக்கியச் செய்திகள் தமிழகம்

போன் ஒட்டுக்கேட்பு விவகாரம்: அமித்ஷா ராஜினாமா செய்ய கே.எஸ்.அழகிரி கோரிக்கை

செல்போன் ஒட்டுக்கேட்பு புகார் விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜினாமா செய்யவேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோரின் செல்போன் கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் சென்னையில் கண்டன பேரணி நடைபெற்றது.

சைதாப்பேட்டை சின்னமலையில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி சிலை அருகிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்றனர். பேரணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். இந்தப் பேரணியில் காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, மிகப்பெரிய ஜனநாயக மீறலையும், அரசியலமைப்பு சட்ட மீறலையும் பாஜக அரசு செய்துள்ளதாகக் கூறினார்.

பேரணியின் முடிவில் தொண்டர்கள் சிலர் ஆளுநர் மாளிகைக்குள் நுழைவதற்காக போலீசாரின் இரும்புத்தடுப்புகளை எடுத்து வீசினர். இதனால் போலீசாருக்கும் தொண்டர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Advertisement:

Related posts

சில தளர்வுகளுடன் 14-ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு!

கட்சிகளுக்கு நிரந்தர சின்னங்கள் தொடர்பான வழக்கு: சத்யபிரதா சாகு பதில் மனு

Vandhana

மு.க. ஸ்டாலின் பதவியேற்பு விழா: 200-க்கும் குறைவான பிரமுகர்களை அழைக்கத் திட்டம்!

Halley karthi