முக்கியச் செய்திகள் சினிமா

பிரியாமணி திருமணம் செல்லாது: முஸ்தபாவின் முதல் மனைவி பகீர்

பிரபல நடிகை பிரியாமணியின் திருமணம் சட்டவிரோதமானது என்று அவர் கணவரின் முதல் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.

பிரபல நடிகை பிரியாமணி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் பாரதிராஜாவின் கண்களால் கைது செய் படம் மூலம் அறிமுகமான அவர் பிறகு பாலுமகேந்திராவின், அது ஒரு கனாகாலம், அமீரின் பருத்திவீரன் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள த பேமிலிமேன் வெப் தொடரிலும் நடித்துள்ளார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். முஸ்தபா ராஜ் ஏற்கனவே ஆயிஷா என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு பிரிந்துள்ளனர்.

இந்நிலையில் பிரியாமணியின் திருமணம் செல்லாது, அது சட்டவிரோதமானது என்றும் நாங்கள் முறையாக விவாகரத்து பெறவில்லை என்றும் முஸ்தபா ராஜின் முதல் மனைவி ஆயிஷா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முஸ்தபா மற்றும் பிரியாமணி மீது கிரிமினல் புகாரும் குடும்ப வன்முறை புகாரும் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

’நானும் முஸ்தபாவும் விவாகரத்து கூட தாக்கல் செய்யவில்லை. ஆனால் பிரியா மணியை அவர் திருமணம் செய்தபோது, தான் திருமணமாகாதவர் என்று குறிப்பிட்டிருக் கிறார்’ என்று தெரிவித்துள்ளார்.

முஸ்தபா ராஜ் இதுகுறித்து கூறும்போது, எனக்கு எதிராக அவர் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை. குழந்தைகளின் பராமரிப்புக்கு தேவையான அனைத்தையும் தவறாமல் செய்து வருகிறேன். இப்போது அவர் என்னிடம் இருந்து பணம் பறிப்பதற்கு இந்த செயலில் இறங்கி இருக்கிறார். 2010-ஆம் ஆண்டில் இருந்தே இருவரும் தனித் தனியாக வாழ்ந்து வருகிறோம். கடந்த 2013-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றோம். ஆயிஷா ஏன் இவ்வளவு காலம் அமைதியாக இருந்துவிட்டு இப்போது கேள்வி எழுப்புகிறார்? என்று தெரிவித்துள்ளார். இந்த புகார் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement:
SHARE

Related posts

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சக்கர நாற்காலியில் பேரணி!

Halley karthi

10 ஆண்டுகளுக்கு பின் கிராமத்திற்கு வந்த அரசு பேருந்தை ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்!

Jeba Arul Robinson

தமிழகத்தில் மீண்டும் உயரும் கொரோனா உயிரிழப்புகள்!

Gayathri Venkatesan