பைசர் நிறுவனத்தின் கொரோனா தொற்றுக்குக்கு எதிரான மாத்திரை 89% வரை செயல்திறனை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வரை 24,95,06,051 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50,48,489 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே தொற்றைக் கட்டுப்படுத்தும் பணியை உலக நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன.
பல்வேறு நிறுவனங்கள் தடுப்பூசியை தயாரித்துள்ளன. அதேபோல மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபியூடிக்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா மாத்திரையை பயன்படுத்த பிரிட்டன் அரசு சமீபத்தில் அனுமதியளித்தது.
இதனையடுத்து கொரோனா தொற்றுக்கு எதிராக மாத்திரைகள் தயாரிக்கும் பணியை மருத்துவ நிறுவனங்கள் தீவிரமாக்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக பைசர் நிறுவனம் மாத்திரியை தயாரித்து வருகிறது. இதற்கான சோதனையில் மாத்திரை தொற்றுக்கு எதிராக 89% செயல்திறனை கொண்டுள்ளதாக கூறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தனது ஆய்வு முடிவுகளை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சர்பிக்க உள்ளதாக தெரிவத்துள்ளது. இந்த ஆய்வு முடிவகளை பரிசீலித்து ஒப்புதல் அளிக்கப்பட்டால் இந்த மாத்திரை அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்துவிடும்.
‘பாக்ஸ்லோவிட்’ என்கிற பெயரில் வெளிவரவுள்ள இந்த மாத்திரைகள், நாளொன்றுக்கு இரண்டு வேளை தலா மூன்று மாத்திரைகளாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பைசர் தெரிவித்துள்ளது.
பைசர் நிறுவனம் 1,219 தன்னார்வலர்களை கொண்டு 28 நாட்கள் நடத்திய ஆய்வில் இந்த மாத்திரையை பயன்படுத்தியவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என தெரிவித்துள்ளது.








