தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிப்பில் கடந்த ஜூன் 4 ஆம் தேது வெளியான திரைப்படம் ‘பெத்தி’. புஜ்ஜிபாபு சனா இயக்கியிருந்த இப்படத்தில் ஜான்வி கப்பூர், சிவாராஜ்குமார், ஜகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
மலைவாழ் இளைஞரான ராம் சரண் தன் கிராமத்தின் அங்கீகாரம் மற்றும் அடிப்படை வசதிகளுக்காக விளையாட்டு துறையில் சாதிக்க முயற்சிக்கிறார். கிரிக்கெட், குஸ்தி உள்ளிட்ட போட்டிகளில் பங்குபெறும் ராம் சரண் தன் லட்சியத்தில் வென்றாரா என்பதை ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் ட்ராமாவாக கூறுகிறது பெத்தி.
கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் பெத்தி திரைப்படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது பெத்தி திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகளவில் 236 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.




