பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை அவசியம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”பாஜக தலைமையகம் மீதான குண்டுவீச்சு சம்பவத்தின் உண்மை பின்னணியை கண்டறிய வேண்டும். தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர் நீட் தேர்வு ஆதரவு காரணமாக குண்டுவீசியதாக கூறுவது நகைச்சுவையாக உள்ளது என தெரிவித்தார்.”
மேலும், குண்டுவீச்சு சம்பவத்தில் மிகப்பெரிய சதி உள்ளது எனவும், இதனை விரிவாக விசாரிக்க வேண்டும் என கூறிய அவர், தடயத்தை காவல்துறை அழித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், என்.ஐ.ஏ விசாரணை வேண்டும் எனவும் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவிப்பு
ஆளும் கட்சி எங்கள் வேட்பாளரை மிரட்டினாலும், சூறையாடினாலும் பெரும் மாற்றத்தை பாஜக கொண்டு வரும் என தெரிவித்த அவர், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு அதிகரித்துள்ளதாகவும், இதையெல்லாம் நிறுத்தவில்லையென்றால் என்ன ஆகும் என்பதை சொல்ல முடியாது எனவும், தமிழகத்தில் உண்மையாகவே மக்களுக்கான ஆட்சி தான் நடைபெறுகிறதா? என கேள்வி எழுப்பினார், இவ்வாறு அவர் பாஜக அலுவலகத்தில் இருந்து பேசினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







