முக்கியச் செய்திகள் தமிழகம்

மூக்கணாங்கயிறை எதிர்த்து வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு. 

 மூக்கணாங்கயிறு  போட அனுமதிக்கும் மிருகவதை தடை சட்டப்பிரிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக அதன் மூக்கில் துளையிட்டு மூக்கணாங்கயிறு  போட அனுமதிக்கும் மிருகவதை தடை சட்டப்பிரிவை எதிர்த்து, சென்னை அயனாவரத்தை சேர்ந்த செந்தில் குமார் என்பவர், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், மாடுகளை கட்டுப்படுத்துவதற்காக அதன் மூக்கு சதையில் ஓட்டையிட்டு மூக்கணாங்கயிறு  போடுவதால், மாடுகள் துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, மூக்கணாங்கயிறு போட அனுமதிக்கும் வகையில் உள்ள மிருகவதை தடைச் சட்டப் பிரிவை  செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரப்பட்டது.’

உலக அளவில் மாடுகளை கட்டுப்படுத்த, இந்த நடைமுறை தான் பின்பற்றுவதாக தெரிவித்த நீதிபதிகள், இதற்கு புதிய விதிகளை வகுத்து உலகத்தை பின்பற்றச் செய்வோம் எனத் தெரிவித்தனர். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் 4 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை  8 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

Advertisement:
SHARE

Related posts

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்

Saravana Kumar

டாஸ்மாக் கடை மேலாளரை தாக்கி 7.8 லட்சம் கொள்ளை!

Saravana

முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுகவில் இணைந்தார்

Vandhana