பிரபல ஹாலிவுட் திரைப்படமான ‘தி சீக்ரெட் ஏஜென்ட்’ படத்தைப் பார்த்து வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர் கைது செயப்பட்டுள்ள சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.
டெல்லி மாடல் டவுன் பகுதியில் உள்ள எச்டிஎப்சி வங்கியில் திரைப்படம் மூலம் ஈர்க்கப்பட்டு வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் வடகிழக்கு டெல்லியின் காரவால் நகரில் வசிக்கும் இம்ரான் என்கிற ராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அந்த நபர், தையல் தொழிலாளி என, போலீசாருக்கு தகவல் அளித்துள்ளானர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
போலீஸ் வட்டாரங்களின்படி, கைது செய்யப்பட்ட நபர், சுமார் மூன்று வாரங்களுக்கு முன்பு அவர் தனது தொலைபேசியில் பிரபல ஹாலிவுட் திரைப்படமான ‘தி சீக்ரெட் ஏஜென்ட்’ படத்தைப் பார்த்ததாகவும், அதைத் தொடர்ந்து கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் இம்ரான் விசாரணையில், செவ்வாய்கிழமை காலை தொழிற்சாலை உரிமையாளருடன் தகராறு செய்ததைத் தொடர்ந்து, தொழிற்சாலையை விட்டு வெளியேறி மாடல் டவுனுக்கு வந்து வங்கியில் கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது. வங்கிக்கு செல்லும் முன், மது குடித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வடமேற்கு காவல்துறை துணை ஆணையர் (டிசிபி) ஜிதேந்திர மீனா கூறுகையில், “செவ்வாய்கிழமை மதியம், வங்கிக்குள் துப்பாக்கிச் சூடு நடந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. கொள்ளையடிக்கும் நோக்கத்தில் ஒருவர் வங்கிக்கு வந்துள்ளார். அவர் ஒரு கைத்துப்பாக்கியை எடுத்தார். ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டார். அதன்பிறகு உடனடியாக பீட் ஊழியர்கள் அந்த இடத்தை அடைந்து குற்றம் சாட்டப்பட்டவரை அடக்கினர்.
“இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கி எங்கிருந்து வந்தது என்பதை நாங்கள் விசாரிக்கிறோம். குற்றம் சாட்டப்பட்டவர் அலகாபாத்தில் வசிப்பவர்” என்று டிசிபி கூறினார்.
சுமார் ஒரு கோடி ரூபாயை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதாக இம்ரான் தெரிவித்துள்ளார். யாரையும் கொல்லும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் இம்ரான் கூறியுள்ளார்.
மேலும், வங்கி ஊழியர்களை பயமுறுத்துவதற்காகவே ஐந்து ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டதாகவும், தன்னால் கொள்ளையடிக்க முடியாது என்பதை உணர்ந்ததும், வங்கி ஊழியர்களை போலீஸை அழைக்கச் சொன்னதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.
போலீஸ் வட்டாரங்களின்படி, துப்பாக்கி குறித்து இம்ரானிடம் போலீசார் கேட்டபோது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் யமுனையில் குளிக்கச் சென்றதாகவும் அங்கு கரையோரத்தில் பிஸ்டல் கிடந்ததைக் கூறியிருக்கிறார். அன்றிலிருந்து அவர் தனது ஆடைகளுடன் கைத்துப்பாக்கியை மறைத்து வைத்து எடுத்துச் சென்றார்.
ஆனால் இதுவரை பயன்படுத்தியதில்லை. கைத்துப்பாக்கியின் மூலத்தைக் கண்டறிய இம்ரானிடம் போலீசார் இப்போது முழுமையாக விசாரித்து வருகின்றனர். ஏனெனில் கைத்துப்பாக்கியைத் தவிர, அவரிடமிருந்து இரண்டு மேகசின்கள், 7 லைவ் கார்ட்ரிட்ஜ்கள் மற்றும் ஐந்து பயன்படுத்திய தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.