பேராவூரணியில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது.
திமுக தலைவர் மு. க ஸ்டாலின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு திமுக தெற்கு ஒன்றியம் மற்றும் இளைஞர் அணி சார்பாக பேராவூரணியில் மாபெரும் மாட்டு வண்டி, குதிரை வண்டி போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கொடி அசைத்து துவங்கி வைத்தார்.
இதில் தஞ்சாவூர் எம்.எல்.ஏ துறை. சந்திரசேகர், பேராவூரணி எம். எல். ஏ நா. அசோக் குமார் கலந்து கொண்டனர். இதற்கிடையே போட்டியில் 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் , குதிரை வண்டிகள் பங்கேற்று எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்தன. போட்டியில் மொத்த பரிவு தொகையாக ரூ 5 லட்சம் கொடி பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.
—கோ. சிவசங்கரன்







