நிலத்தை அபகரிக்க முயன்றது தொடர்பாக புகாரளித்த ஆட்டோ ஓட்டுநரின் வீட்டை துவம்சம் செய்த திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் விளாச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் பாண்டி, இவர் அப்பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு, தன் மனைவி சித்ராவின் பெயரில் நிலம் வாங்கி வீடு கட்டி வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த திமுக ஊராட்சி மன்றத் தலைவர் குறும்பன், அந்த நிலத்திற்கு சொந்தம் கொண்டாடியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்னை நிலவி வந்த நிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் குறும்பன் மீது, ஆட்டோ ஓட்டுநரான பாண்டி, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதை அறிந்த குறும்பன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், பாண்டியின் வீட்டை அடித்து நொறுக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாண்டி, காவல் நிலையில் புகார் அளித்ததை அடுத்து, குறும்பன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.