திருச்சி மாவட்டம் கல்லக்குடி பேரூராட்சியில் உள்ள குப்பை கிடங்கை, பொதுமக்கள் வள மீட்பு பூங்காவாக மாற்றி உள்ளனர்.
கல்லக்குடி பேரூராட்சி பகுதியில் உள்ள உணவகங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து தினமும் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்களால் பெறப்படும் குப்பைகள், பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் மலை போல கொட்டி வைக்கப்பட்டிருந்தன. இந்தக் குப்பைகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரிக்கப்பட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மக்கும் குப்பைகளிலிருந்து மண்புழு உரம், இயற்கை உரம் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.மேலும் குப்பை கிடங்கில் உள்ள நான்கில் ஒரு பகுதி இடத்தை குப்பை சேகரிக்கவும், பிற இடங்களில் மண் புழு உரம் உள்ளிட்ட உரங்கள் தயாரிக்கவும் ஒதுக்கியுள்ளனர். எஞ்சியுள்ள இடங்களில் பசுமைத் தோட்டம் அமைத்ததோடு, நடைபயிற்சி செல்லும் வகையிலும் அப்பகுதி மக்கள் வளமீட்பு பூங்காவாக மாற்றியுள்ளனர்.