ஒரே கிராமத்தில் உள்ள இரண்டு ஏரிகளில் அதிகாலை முதல் நடைபெற்ற மீன் பிடித் திருவிழாவில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு மீன்களைப் பிடித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தண்டலை கிராமத்தில் பெரிய ஏரி மற்றும் சித்தேரி என இரண்டு ஏரிகள் உள்ளது. இந்த இரண்டு ஏரிகளிலும் மீன்கள் பாராமரிக்கப்பட்டு விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது இரண்டு ஏரிகளிலும் ஒரே நாளில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
இதில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இரண்டு ஏரிகளிலும் இறங்கிய மக்கள் தங்களுடைய வலைகளை வீசி கிலோ கணக்கிலான மீன்களை பிடித்து செல்கின்றனர். மேலும் மழைக்காலம் துவங்க உள்ளதால் ஏரிகளில் உள்ள மீன்களைப் பிடிப்பதற்கு குத்தகைதாரர்கள் அனுமதி அளித்துள்ளனர். இதனால் கிராம மக்கள் ஏரியில் இறங்கி மீன்களைப் பிடித்து வந்த வண்ணமாக உள்ளனர்.
இரண்டு ஏரிகளிலும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குவிந்துள்ளனர்.மேலும் தண்டலை மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்களும் மீன்களைப் பிடித்து வருகின்றனர்.







