முக்கியச் செய்திகள் தமிழகம்

காசிமேடு மீன் சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம்

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பொதுமக்கள் அதிகளவில் கூடியுள்ளதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் வருகை தந்துள்ளனர்.

அதிகாலை முதல் அதிகளவில் மக்கள் வருகை தரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க பல்வேறு இடங்களில், கூட்டம் கூடுவதை தடுக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

டீசல் விலை உயர்வால் குறைந்த அளவிலான விசைபடகுகளே மீன்பிடிக்க கடலுக்கு சென்றன. இதனால் மக்கள் அதிகம் விரும்பி வாங்கும் மீன்களின் வரத்து குறைவாகவே இருந்தது. வஞ்சிரம் கிலோ ரூ.1000, சின்ன சங்கரா கூடை ரூ.2000, கடம்பா கூடை ரூ.2000 எனக் குறைவான விலையிலேயே மீன்கள் விற்பனைானது. மீன்கள் விலை குறைந்துள்ளதால் அவற்றை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Advertisement:
SHARE

Related posts

வாக்கு எண்ணும் அறைகள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் : சத்யபிரத சாகு

Ezhilarasan

இரும்பு உருக்காலையில் 10 டன் வெடிகுண்டுகள் பறிமுதல்!

Gayathri Venkatesan

பெங்களூருவில் காரை கடித்துக்குதறிய வங்கப் புலி; வைரலாகும் வீடியோ!

Saravana