வண்ணமய பைகளுடன் ‘தத்தி தத்தி’ சென்ற பென்குயின்கள் – வைரல் வீடியோ!

அழகிய பென்குயின்கள் எங்கோ பயணம் செல்வது போல், வண்ணமயமான பைகளை தன் முதுகில் தாங்கியபடி எடுத்து செல்லும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகள் அல்லது வேறு…

அழகிய பென்குயின்கள் எங்கோ பயணம் செல்வது போல், வண்ணமயமான பைகளை தன் முதுகில் தாங்கியபடி எடுத்து செல்லும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாகவே வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகள் அல்லது வேறு இடத்தில் இருந்தாலும் சுட்டித்தனமாக வலம் வரும் உயிரினங்கள் செய்கின்ற சேட்டைகளையும், கோமாளித்தனங்களையும் படம்பிடிக்கும் வீடியோக்கள் எப்போதுமே பார்ப்பவர்களை மகிழ்வித்து, சமூகவலைத்தளங்களிலும் வைரலாவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில், @buitengebieden என்கிற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டிருந்த பென்குயின்களின் வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் பென்குயின்கள் எங்கோ பயணம் செல்வது போல், வண்ணமயமான பைகளை தன் முதுகில் தாங்கியபடி ‘தத்தி தத்தி’ நடந்து செல்வதோடு, அவைகளுக்கு இடையே உள்ள தோழமையையும், நடை அழகையும் பார்க்கும் போது உள்ளம் கவரும் வண்ணம் அமைந்துள்ளது. கடந்த 5-ம் தேதி பகிரப்பட்ட இந்த வீடியோ கிட்டத்தட்ட 1.62 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும், லட்சக்கணக்கான லைக்குகளையும் குவித்து வரும் அதே வேளையில் பல பொசிட்டிவ் காமென்ட்ஸ்களையும் பெற்று வருகிறது.

https://twitter.com/buitengebieden/status/1687890449665568769?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1687890449665568769%7Ctwgr%5E5173c2d47a5f6848eb7f9041fa1cce6496106c11%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Ftrending%2Fheartwarming-video-of-penguins-carrying-backpacks-goes-viral-watch-101691330875379.html

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.