PBKSvsDC | டெல்லி அணிக்கு 207 ரன்களை இலக்காக நிர்ணயித்த பஞ்சாப்!

டெல்லி அணிக்கு 207 ரன்களை இலக்காக பஞ்சாப் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது.

நடப்பாண்டிற்கா ஐபிஎல் லீக் சுற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஸ்ரேயாஷ் தலைமையிலான பஞ்சாப் அணி, ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான டெல்லி அணியை இன்று(மே.24) எதிர்கொண்டு வருகிறது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான டாஸை வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸை தொடங்கிய பஞ்சாப் அணியில் அதிகப்பட்சமாக ஷரேயாஸ் ஐயர் அரைதசம் அடித்து அசத்தினார். அதன்படி அவர் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கடுத்தபடியாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 44* ரன்களும், ஜோஷ் இங்கிலிஸ் 32 ரன்களும், பிரப்சிம்ரன் சிங் 28 ரன்களும் அடித்தனர்.

இதன் மூலம் 20 ஓவர்களில்  8 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 206 ரன்கள் குவித்தது. டெல்லி அணி சார்பில் அதிகபட்சமாக முஸ்தாபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளும், விப்ராஜ் நிகம் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இதையடுத்து பஞ்சாப் அணி 207 என்ற இலக்கை சேஸிங் செய்து வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.