இயக்குனர் பாக்யராஜ் மறைவு – நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!

நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் பாக்யராஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் (73) இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பாக்யராஜின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியில் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் முதலமைச்சர் ஜோசப் விஜய், திமுக தலைவர் மு.கஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே மறைந்த இயக்குநர் பாக்யராஜ் இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இந்நிலையில், மறைந்த இயக்குனர் பாக்யராஜ் உடல் நாளை மதியம் 1.30 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் பாக்யராஜின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து எக்ஸ் தலத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் திரு. பாக்யராஜ் அவர்கள்.

அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.

அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.