கனமழையால் தண்ணீர் சூழ்ந்த எண்ணூர் மாநகரப் பேருந்து பணிமனை!

சென்னை எண்ணூர் மாநகர பேருந்து பணிமனை முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளதால், பயணிகள் அவதிப்பட்டனர். சென்னையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் எண்ணூர், தாழங்குப்பம் , முகத்துவாரகுப்பம், நேரு நகர்…

சென்னை எண்ணூர் மாநகர பேருந்து பணிமனை முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளதால், பயணிகள் அவதிப்பட்டனர்.

சென்னையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் எண்ணூர், தாழங்குப்பம் , முகத்துவாரகுப்பம், நேரு நகர் மற்றும் காமராஜ நகர் உள்ளிட்ட
பகுதிகளை சேர்ந்த பள்ளி மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் மற்றும் கல்லூரி
மாணவர்கள் எண்ணூர் பேருந்து பணிமனையில் வந்து தான் பேருந்தில் பயணம் செய்வார்கள்.

மேலும், பிராட்வே உயர்நீதிமன்றம் மற்றும் திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு
இங்கிருந்து தான் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், நேற்று இரவு முழுவதும்
விட்டு விட்டு பெய்த மழையின் காரணமாக, எண்ணூர் பணிமனை பேருந்து நிறுத்தம்
உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது. இதனால், மாநகரப் பேருந்து
ஓட்டுநர்கள் மிகவும் சிரமத்துடன் பேருந்தை இயக்கினர்.

தொடர்ந்து, இப்பகுதியில் மழை நீர் தேங்குவதாலும் முறையாக சீரமைக்காததாலும்,
பணிமனை பேருந்தில் ஏறுவதற்கு பயணிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த பகுதியில், மாநகரப் பேருந்து பணிமனை
அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் முறையாக மழை நீர் வடிகால் கால்வாய்களை அமைத்து தர வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

—–கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.