வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கும் கட்சிக்கே சட்டமன்றத் தேர்தலில் ஆதரவளிப்போம் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் விக்கிரமராஜா தலைமையில், தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டனர்.
விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, ஜிஎஸ்டி வரி விதிப்பு, சுங்க கட்டண முறையில் இரட்டிப்பு கட்டணம் வசூலித்தல், வணிக நிறுவனங்களை முன்னறிவிப்பு இன்றி காலி செய்தல் ஆகியவற்றால் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
வணிகர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டு நாட்களுக்குள் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என அவர் அறிவித்தார். வணிகர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கும் கட்சியினருடன் ஒருங்கிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.







